Sri Lanka News

பாரிய விபத்தை தடுத்து பல உயிர்களை காப்பாற்றிய இருவருக்கு கிடைத்த கௌரவம்

பாணந்துறை – மொரட்டுவ பகுதியில் ஏற்பட்ட இருந்த பாரிய தொடருந்து விபத்தை தடுத்த பொதுமகன் சமந்த பெர்னாண்டோ கௌரவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தொடருந்தை மோதாமல் நிறுத்திய சாரதி விதுர விதர்ஷனும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் தொடருந்து பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர உட்பட பலர் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பாணந்துறை – மொரட்டுவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் உடைந்த தண்டவாளத்தைக் கண்டு, சாகரிகா என்ற தொடருந்தை குறித்த இடத்திற்கு வருவதற்கு முன்பே நிறுத்தி ஏற்படவிருந்த விபத்தை தடுத்த சமந்த பெர்னாண்டோ என்ற நபர் தடுத்திருந்தார்.

தண்டவாளம் உடைந்திருந்த நிலையில், அதனை கண்ட சமந்த பெர்னாண்டோ, தனது சிவப்பு நிற சண்டையை கழற்றி தொடருந்து ஓட்டுநருக்கு ஆபத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பாதுகாப்பாக தொடருந்து நிறுத்தப்பட்டமையினால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button