லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்குச் செல்லும் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்லும் தனியார் கார் நிறுத்தத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 140 வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
சனிக்கிழமை இரவு 09 மணியளவில், கிராவ்லி அருகே உள்ள வல்லேஜ் லேன், ரோஃபாண்ட் பகுதியில் அமைந்துள்ள கால்டைன் ‘சஃபையர் பார்க்கிங்’ (Sapphire Parking) பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு மேல் மிகப்பெரிய தீப்பிழம்புகளும், அடர்ந்த புகையும் சூழ்ந்திருந்தன.
இந்தத் தீ விபத்தின் காரணமாகச் சனிக்கிழமையன்று அப்பகுதியில் இருந்த 2,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார விநியோகம் தடைபட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் திட்டமிட்டு தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 67 வயது முதியவர் ஒருவரை சசெக்ஸ் பொலிஸ் கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.
கென்ட் பகுதியைச் சேர்ந்த பென்னி ரீயர்டன் என்ற பெண் ஸ்பெயின் நாட்டிலிருந்து சுற்றுலா முடிந்து திரும்பியபோது, தனது மெர்சிடிஸ் கார் முற்றிலும் எரிந்து சாம்பலாகியிருந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார். “என் ஒட்டுமொத்த வாழ்க்கையும் முடங்கியது போல் உணர்கிறேன்” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
விபத்து நடந்த தளம் கேட்விக் விமான நிலையத்திற்குச் சொந்தமானதோ, அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு இயக்கப்படுவதோ இல்லை என்று விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ‘சஃபையர் பார்க்கிங்’ (Sapphire Parking) நிறுவனம், இந்த விபத்து ஒரு பெரிய கனவு போன்றது என்றும், இதனால் சுமார் 600 முன்பதிவுகளை ரத்து செய்ய நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
#GatwickAirport #UKFireAccident #LondonNews #News21tamil

