Sri Lanka News
🔴 இன்று நாட்டின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு!

Social TV
கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த நீர்வெட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (07) காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா – எல , கட்டுநாயக்க, சீதுவை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கந்தானை, மினுவாங்கொடை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது