Sports
இங்கிலாந்து ,தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் போட்டி – ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான் முதல் ஒருநாள் போட்டி நாளை லீட்ஸில் உள்ள ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய கையோடும், இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய கையோடும் இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் இப்போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.