Sri Lanka News

என் கணவர் அப்பாவி மஹிந்தானந்தாவின் மனைவி நீண்ட பதிவு!

முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மனைவியும், மறைந்த பிரதமர் டி.எம். ஜயரட்னவின் மகளுமான செனானி ஜெயரத்னா, அண்மையில் ஒரு பெரிய ஊழல் வழக்கில் தனது கணவர் தண்டிக்கப்பட்டதை கண்டித்து சமூக ஊடகத் தளத்தில் ஒரு பதிவொன்றை இட்டுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகேயின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் வழியாகப் பகிரப்பட்ட ஒரு நீண்ட பதிவில் அவர்,

தனது கணவர் நிரபராதி என்றும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் சட்ட செயல்முறை அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

அதேநேரம், நீதி அமைச்சரின் அண்மைய கருத்தையும் அவர் கேள்வி எழுப்பினார், NPP ஆட்சியில் இல்லாவிட்டால் அத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.

தனது கணவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அரசு நிதியில் இருந்து ரூ.53 மில்லியன் மோசடி செய்ததாக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button