Home செய்திகள்யாலா ஜெட்விங் ஹோட்டலினுள் அமைதியாக நுழைந்த காட்டு யானை விருந்தினர்கள் ஆச்சரியம்!

யாலா ஜெட்விங் ஹோட்டலினுள் அமைதியாக நுழைந்த காட்டு யானை விருந்தினர்கள் ஆச்சரியம்!

by Nabishad
0 comments

-Nabishad Abu Hanshif-

யாலாவில் உள்ள Jetwing Yala ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிர்பாராத ஆச்சரியம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

காட்டு யானையொன்று அமைதியாக ஹோட்டல் லொபிக்குள் நுழைந்து, பின்னர் மீண்டும் வெளியேறியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில், காட்டு யானை ஹோட்டல் வளாகத்திற்குள் அமைதியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

ஹோட்டல் ஊழியர் ஒருவர் இந்த அரிய சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துள்ளார்.

banner

யானை எவ்வித பதற்றத்தையும் ஏற்படுத்தாமல், அங்கிருந்த மேசைகள் மற்றும் ஹோட்டல் உபகரணங்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படுத்தாமல் லொபி வழியாக அமைதியாக நடந்து சென்றதாக காணொளியில் தெரிகிறது.

பின்னர், யானை தானாகவே ஹோட்டலை விட்டு வெளியேறியதுடன், ஊழியர்களுக்கோ ஹோட்டல் சொத்துக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஹோட்டல் லொபிக்குள் யானையொன்று அமைதியாக உலா வந்த இந்த வித்தியாசமான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.

You may also like

Leave a Comment