
வலய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் 18 வயதுப்பிரிவில் SF.சஹானா சம்பியனாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குண்டு போடுதல், தட்டெறிதல், ஈட்டியெறிதல் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி முதலாமிடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
சம்பியனாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவிக்கும் பயிற்சி வழங்கிய பாடசாலையின் விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர் ALM.றிஸ்வாஹிதீன், உடற்கல்வி ஆசிரியர் RAM.பாஸித், இம்மாணவியை நிகழ்ச்சிக்காக அழைத்துச்சென்ற ஆசிரியை AF.றிபாஸா ஆகியோருக்கும் பாடசாலை அதிபர் MSM.றிஸ்மின் வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.