Sri Lanka News
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக எம்.எப். பர்ஹான் நியமனம்!

அட்டாளைச்சேனை பாலமுனையைச் சேர்ந்த இளம் புதல்வர் பொறுப்பேற்பு!
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக எம்.எப். பர்ஹான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அட்டாளைச்சேனை, பாலமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், பிரபல கவிஞர் பாலமுனை பாறுக் அவர்களின் புதல்வராவார்.
புதிய கணக்காளர் பர்ஹான் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இப்புதிய நியமனம் பிரதேச மக்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல உள்ளூர் செய்திகளுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்!