Home சினிமா செய்திகள்’‘ஓன்ஸ் மோர்’ முதிர்ச்சியான காதல் கதை: அர்ஜுன் தாஸ் நேர்காணல்

’‘ஓன்ஸ் மோர்’ முதிர்ச்சியான காதல் கதை: அர்ஜுன் தாஸ் நேர்காணல்

by Nabishad
0 comments

ஆக்‌ஷன் கதைகளில் நடித்து வரும் அர்ஜுன் தாஸ், ‘ஒன்ஸ் மோர்’ படத்தில் காதல் கதையில் நடித்திருக்கிறார். விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி ஷங்கர், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஆக.28-ல் வெளியாக இருக்கிறது. படம் பற்றி அர்ஜுன் தாஸிடம் பேசியதில் இருந்து…

இது அழகான காதல் கதை. இதை ரோம்-காம் படம்னு சொன்னாலும் குடும்ப உறவுகள் பற்றி அழகா பேசற திரைக்கதை இருக்கு. ரகு அப்படிங்கற கதாபாத்திரத்துல நான் நடிச்சிருக்கேன். முதல் காதல் எல்லாருக்குமே மறக்க முடியாத ஒண்ணு.
அப்படியான காதலை மறக்க முடியாம மனசுக்குள்ளேயே சுமந்துகிட்டிருக்கிற ரகு, என்ன பண்றான்; அவன் வாழ்க்கையில இன்னொரு பெண் வரும்போது, என்ன நடக்குன்னு கதை போகும். நிறைய ‘ரோம்- காம்’ படங்கள் வந்தாலும் இது அந்தப் படங்கள்ல இருந்து நிச்சயமா வித்தியாசமானதா இருக்கும்.

அப்படியான கதைகள் வரலை. இது அமைஞ்சது. இதில் இரண்டு கதாநாயகி கள் இருக்காங்க. எங்க மூன்று பேருக்குள்ள நடக்கிற கதைதான் படம். இயக்குநர், முதல்ல இது மியூசிக்கல் லவ் ஸ்டோரினு சொல்லும்போது, ஆச்சரியமா பார்த்தேன். கதையை கேட்டதும் எனக்கு ரொம்ப பிடிச்சது. இது முதிர்ச்சியான காதல் கதை. அப்புறம் ஒரு நடிகன் எல்லா கேரக்டர்லயும் நடிக்கணும். அப்படித்தான் இந்தக் கதையில வந்தேன்.

banner

காதல்ங்கற எமோஷன் பொதுவானதுதான். எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருந்தார். அவரோட முதல் காதல் தோல்வியில முடிஞ்சு பல வருஷமானாலும் அதைவிட்டுட்டு அவரால வெளிய வர முடியல. அவரோட ‘எக்ஸு’க்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருந்தாலும் மறக்க முடியாம அவஸ்தைபட்டுட்டு இருந்ததை பார்த்திருக்கிறேன். இதுவும் அது மாதிரியான ஒரு கதைதான். ‘ஹார்ட் பிரேக்’-ல இருந்து வெளிவர முடியாம தவிச்சு, பிறகு எப்படி வெளி வர்றார்னு கதை போகும். ரொம்ப தெளிவான திரைக்கதை.

‘கைதி’ படத்துல நான் பண்ணின அன்பு கேரக்டர் எல்லோருக்குள்ளும் ரொம்ப அழுத்தமா பதிஞ்சிருச்சு. ‘இவர் அப்படித்தான் எப்போதும் கோபமாகவே இருப்பார், சிரிக்கவே மாட்டார்’னு எல்லோரும் நினைக்கிறாங்க. ஆனா, இந்தக் கதைக்கு எப்படின்னா, ரியல் லைஃப்ல எப்படி இருக்கீங்களோ, அப்படியே இருந்தா போதும்னு இயக்குநர் சொன்னார். மற்றபடி எந்த வித்தியாசமும் தெரியல.

You may also like

Leave a Comment