Home இலங்கைச் செய்திகள்டிட்வா’ சூறாவளி; 79% வீதம் செலவிடப்படாத நிவாரண நிதி!

டிட்வா’ சூறாவளி; 79% வீதம் செலவிடப்படாத நிவாரண நிதி!

by Nabishad
0 comments

‘டிட்வா’ சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து, புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதம் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, எஞ்சிய நிவாரணத் தொகைகளை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தினால் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் 86.7 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும், அதில் 26.4 பில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட 1.05 பில்லியன் ரூபாயில், 190 மில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

banner

எவ்வாறாயினும், அவசர நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 7.6 பில்லியன் ரூபாயில் 85 சதவீதமான நிதி ஏற்கனவே பயனாளிகளைச் சென்றடைந்துள்ளது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும், உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாகச் சீரமைக்கவும் எஞ்சியுள்ள நிதியைத் தாமதமின்றி வழங்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment