Home கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகே.எம்.சி. பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வு.

கே.எம்.சி. பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வு.

by Nabishad
0 comments

(றாசிக் நபாயிஸ், மருதமுனை செய்தியாளர்)

கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்குகின்ற கே.எம்.சி. பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வு நேற்று (14) வெள்ளிக்கிழமை பெரியநீலாவணையில் அமைந்துள்ள
மாநகர சபையின் கலாசார நிலைய வளாகத்தில் பாடசாலையின் ஆசிரிகைகளான எம். பர்சானா, எம்.பீ. பஸ்மின் சிகாறா மற்றும் சி.ஜ. பர்வின் சீமா ஆகியோரின் இணைப்பாக்கத்தில் மருதமுனை பொது நூலகத்தின் நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுத்தீன் அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் என்.எம். நவ்பீஸ், கௌரவ அதிதிகளான கல்முனை மாநகர கணக்காளர் ஏ.எஸ்.எம். அஹ்சன், முன்னாள் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளரும் தற்போதைய உகண பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளருமான ஏ.எஸ்.எம். அஸீம் அவர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கல்முனை மாநகர சபையின் நிர்வாக உத்தியோகாதர் எஸ். சுபராஜன் மற்றும் பெரியநீலாவணை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பி. கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.

banner

இந்நிகழ்வில் 35 மாணவச் செல்வங்களினால் அமைக்கப்பட்ட கடைத் தொகுதிகள் பொது மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றதுடன் அதிகமான பொது மக்கள் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

You may also like

Leave a Comment