Home வெளிநாட்டுச் செய்திகள்862 சுற்றுலாப் பயணிகளுடன் காங்கேசன்துறையை வந்தடைந்த கார்டெலியா கப்பல்!

862 சுற்றுலாப் பயணிகளுடன் காங்கேசன்துறையை வந்தடைந்த கார்டெலியா கப்பல்!

by Mohamed Siraj
0 comments

இந்தியாவின் மும்பையிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் இன்று (14) காலை யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

862 சுற்றுலாப் பயணிகளுடன் வருகை தந்துள்ள குறித்த கப்பல், இன்று மாலை மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து சென்னை நோக்கிப் புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை முன்னிட்டு துறைமுகப் பகுதியில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

banner

இக்கப்பலில் லண்டன், இந்தியா, ஜேர்மனி, மொரீஷியஸ், அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களை பார்வையிட்ட பின்னர், அவர்கள் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்குத் திரும்பி, கப்பல் மூலம் சென்னை நோக்கிப் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சர்வதேச சுற்றுலாக் கப்பல்கள் வருகை தருவது, வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் பிராந்திய பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல்வழியாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதன் மூலம், வடக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்று, சமய மற்றும் இயற்கை சுற்றுலாத் தலங்களுக்கு சர்வதேச அளவில் மேலும் கவனம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment