அம்பத்தலையில் குழாய் வெடிப்பு: கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

அம்பத்தலையிலிருந்து வரும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் கசிவுக் காரணமாக, கொழும்பின் பல முக்கிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, பின்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது:
மொரட்டுவை, இரத்மலானை
தெஹிவளை, கல்கிசை
வெள்ளவத்தை, பாமன்கடை
இராவத்தாவத்தை, சொய்சாபுர
முல்லேரியா மற்றும் கொலன்னாவை
மேலும், பத்தரமுல்ல பகுதியில் வசிக்கும் நுகர்வோருக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என சபை குறிப்பிட்டுள்ளது.
தற்போது திருத்தப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இன்று நள்ளிரவுக்குள் (ஜனவரி 3) நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது. அதுவரை கையிருப்பில் உள்ள நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



