World News

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு இன்று

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான இறுதிச் சடங்கு இன்று (04) தெஹ்ரானில் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனிக்கிழமை ஆரம்பமான அமெரிக்க – இஸ்ரேலியத் தாக்குதல்களின் போது கமேனி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஈரான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, கமேனியின் மகன் மொஜ்தாபா கமேனி புதிய அதியுயர் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தீர்மானம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button