Sri Lanka News

மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே செனதீர இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று (08) கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் சிறிய விபத்து ஏற்பட்டால் கூட குறித்த சாரதிகள் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீதிப் பாதுகாப்பைப் பேணும் வகையில் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் வீதிகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும், உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் விசேட கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button