Sri Lanka News

436 புதிய வைத்தியர்களுக்கு நியமனங்கள் அறிவிப்பு

பயிற்சிக்கு பின்னரான நியமனங்களுக்காக விண்ணப்பித்த 436 புதிய வைத்தியர்களுக்கான சேவை நிலையங்களை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, நியமனம் பெற்றுள்ள வைத்தியர்கள் இன்று (09) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகள் அல்லது சுகாதார நிறுவனங்களில் கடமைகளைப் பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த புதிய வைத்தியர்கள் நியமனங்களுக்காக விண்ணப்பித்த விதம் மற்றும் அவர்களின் தகுதிப் பட்டியல் (Merit List) என்பவற்றின் அடிப்படையில், வெளிப்படையான மற்றும் விஞ்ஞான ரீதியான பொறிமுறையின் ஊடாக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் காணப்படும் வைத்தியர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இவர்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதிலும் நாளை (9) காலை 8 மணி முதல் 48 மணிநேரத்திற்கு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வைத்திய பயிற்சியாளர்களின் நியமனங்களை வழங்குவது தொடர்பாக, சுகாதார அமைச்சு தமது சங்கத்துடன் இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி செயற்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button