World News

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கியது ஈரான்

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரசீக வளைகுடா பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை செய்தியை அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் கடல் பகுதியில் உள்ள அனைத்து கப்பல்களின் கவனத்திற்கு இந்த நீரிணை வழியாகப் பயணம் செய்ய வேண்டுமானால் நீங்கள் IRGC-இடம் அனுமதி பெற வேண்டும்.

இந்த கடல் பகுதிக்குள் நுழைய முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் இலக்கு வைக்கப்பட்டு அழிக்கப்படும்.

சர்வதேச கடல்சார் எச்சரிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வானொலி அலைவரிசை ஊடாக இந்தக் கட்டளையை கப்பல் பணியாளர்கள் கேட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button