Accident

நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு

ஓபநாயக்கவில் அமைந்துள்ள ஹோட்டலொன்றிலுள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் நேற்று (08) மாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் இம்புல்தென்னவைச் சேர்ந்தவரென்றும் பெற்றோருடன் ஹோட்டலுக்கு சென்று, நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button