Sports
உலக மேடையில் இலங்கையின் பெருமை! ருமேஷ் தரங்க தங்கம் வென்று சாதனை!

செக் குடியரசில் நடைபெற்ற புகழ்பெற்ற ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் மெய்வல்லுனர் தொடரின் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க அவர்களுக்கு Social TV சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறோம்!
உங்கள் அபாரமான சாதனை இலங்கை விளையாட்டு வரலாற்றில் புதிய பெருமையை உருவாக்கியுள்ளது. மேலும் பல உலக வெற்றிகளுக்கு எங்கள் சிறந்த வாழ்த்துகள்




