Home இலங்கைச் செய்திகள்முக்கிய செய்தி | முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது 40 ஆக உயர்த்தப்படுமா?

முக்கிய செய்தி | முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது 40 ஆக உயர்த்தப்படுமா?

by Mohamed Siraj
0 comments

இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

பாடசாலையை விட்டு வெளியேறும் இளைஞர்கள் உடனடியாக முச்சக்கர வண்டி ஓட்டும் தொழிலுக்குச் செல்வதை கட்டுப்படுத்தி, அவர்களை திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறை வேலைவாய்ப்புகளுக்கு வழிநடத்துவதே இதன் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த யோசனை தற்போது பரிசீலனையிலேயே உள்ளது.

நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும், இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி உற்பத்தித் துறைகளில் அவர்களை இணைப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என அரசாங்கம் கருதுகிறது.

banner

முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்தும் இந்த யோசனை குறித்து உங்கள் கருத்து என்ன?

You may also like

Leave a Comment