Sri Lanka News

மீண்டும் அதிகரித்த தங்க விலை!

நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 394,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதன் விலை 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போதைய சந்தை நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 363,400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,425 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றம் மற்றும் உள்ளூர் சந்தை தேவையின் அதிகரிப்பு காரணமாக தங்க விலையில் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.

Related Articles

Back to top button