Sri Lanka News

அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு: கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் நீதிமன்றம் அறிவித்தல்!

2022-ஆம் ஆண்டு ‘அரகலய’ போராட்டத்தின் போது வீடுகள் சேதமடைந்த அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவின் பிரதிவாதியான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவித்தல் (Notice) அனுப்புமாறு உயர்நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022 மே மாதம் 9-ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்களம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து,

நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இதன்போது பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இவ்வாறு பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்தினால் நட்டஈடு வழங்கப்பட்டது.

இந்த நட்டஈடு வழங்கப்பட்டமை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில்

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட நட்டஈட்டுத் தொகையை மீண்டும் அரசாங்கத்திடம் அறவிட வேண்டும்.

மக்கள் வரிப்பணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு புதிய அறிவித்தலை அனுப்புமாறு மனுதாரர் தரப்பிற்கு உயர்நீதிமன்றம் கட்டளையிட்டது. இச்சம்பவம் இடம்பெற்ற போது அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தமையால், அவரது தரப்பு விளக்கத்தைப் பெறுவது அவசியமெனக் கருதப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button