அம்பாறை சுகாதார சேவையை தரம் உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை!

அம்பாறை பொது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அதன் குறைபாடுகளைக் கண்டறிவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அண்மையில் அம்பாறை வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
நாட்டின் அரச வைத்தியசாலைக் கட்டமைப்பை மிகவும் முறையான மற்றும் உயர்தர வசதிகளுடன் கூடிய நோயாளி பராமரிப்பு சேவைகளுடன் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், மத்திய அரசாங்கம் அனைத்து வைத்தியசாலைகளினதும் குறைபாடுகளுக்கு தீர்வுகளை வழங்கி வருகின்றது.
கிராமப்புற மக்களுக்கு வினைத்திறனான, தரமான மற்றும் முறையான சுகாதார சேவையை வழங்குவதே இந்த அனைத்து நடவடிக்கைகளினதும் முக்கிய நோக்கமாகும்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, அண்மையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள சில வைத்தியசாலைகளின் சிகிச்சை சேவைகள் உள்ளிட்ட தற்போதைய செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இதன்போது அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை, மஹாஓயா ஆதார வைத்தியசாலை, தெஹியத்தகண்டிய ஆதார வைத்தியசாலை, பொத்துவில் ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஆகிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலைகளை அவர் கண்காணிப்புக்கு உட்படுத்தினார்.
பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் தமது சேவைகளை முறையான மற்றும் வினைத்திறனான முறையில் மக்களுக்கு வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதார ஊழியர்களுக்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதன்போது தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
#SocialTV #Ampara #SriLankaNews #HealthNews #HospitalDevelopment #BreakingNews #EasternProvince #SocialTVNews #TamilNews #TrendingNow




