Sri Lanka News

டெங்கு மரணங்கள் 31 ஆக அதிகரிப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

ஜூன் 25 மற்றும் 26 ஆகிய இரு தினங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த மரணங்களின் எண்ணிக்கை, பதிவாகிய மொத்த நோயாளிகளின் சதவீதமாக 0.06% ஆகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 51,049 ஆக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் மாத்திரம் 17,208 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்தே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல், அதிக அவதானம் மிக்க சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளின் எண்ணிக்கை 124 ஆகும்.

Related Articles

Back to top button