Sri Lanka News

சஹஸ்புர கால்வாயில் நபரொருவரின் சடலம் மீட்பு

சஹஸ்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (27) சஹஸ்புர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 55 வயது மதிக்கத்தக்க, 5 அடி 4 அங்குலம் உயரமுடைய, நரைத்த தலைமுடியைக் கொண்ட ஒருவர் எனவும், அவர் இறக்கும் போது கருப்பு நிற சட்டை மற்றும் கருப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சடல அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சஹஸ்புர பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button