Sports

சஞ்சு சாம்சன் அதிரடி: டெல்லியை சிதறடித்தது சிஎஸ்கே – பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!

ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய முக்கியமான லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சிஎஸ்கே வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

டெல்லி தரப்பில் சமீ் ரிஸ்வி அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே சார்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த சென்னை அணிக்கு சஞ்சு சாம்சன் இமாலய தொடக்கத்தை தந்தார்.

டெல்லி பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 52 பந்துகளில் 87 ரன்கள் (7 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குப் பக்கபலமாக ஆடிய கார்த்திக் சர்மா 41 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 17.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய சிஎஸ்கே, தனது 10-வது போட்டியில் 5-வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மீதமுள்ள போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும்.டெல்லி

155/7 (20 ஓவர்)சென்னை: 159/2 (17.3 ஓவர்)ஆட்ட நாயகன்: சஞ்சு சாம்சன் (87*)

Related Articles

Back to top button