Sports

இலங்கைக்கு, இங்கிலாந்து நிர்ணயித்த இலக்கு!

ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி இன்று (22) இடம்பெறுகின்றது.

பிற்பகல் 3.00 மணிக்கு கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் பில் சோல்ட் 62 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுக்களையும், மகேஷ் தீக்‌ஸன 2 விக்கெட்டுக்களையும், டில்சான் மதுஷங்க 2 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன்படி, இலங்கைக்கு 147 வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button