News

மோட்டார் சைக்கிள் மோதியதில் பொலிஸ் அலுவலர்கள் நால்வர் காயம்….!

களுத்துறையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை – பாலத்தோட்டை அருகே, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள், பயிற்சிக்காகச் சென்ற பொலிஸ் குழு மீது மோதி விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள், களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக நாகோடாவிலிருந்து தனது தனியார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த நான்கு அதிகாரிகளும் சிகிச்சைக்காக களுத்துறை நாகோடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற கான்ஸ்டபிள், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று களுத்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button