News

எகிறியது தங்க விலை! மத்திய கிழக்கு போரால் உலகச் சந்தையில் இன்று புதிய உச்சம்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (18) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

​உலகளாவிய பதற்ற நிலை மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு கருதிய முதலீடுகளே இந்த விலை அதிகரிப்புக்கு (Safe-haven assets) காரணமாக அமைந்துள்ளது.

​அதன்படி, தங்கம் ஒரு அவுண்ஸ் 4,831.23 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு அவுண்ஸ் 80.83 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

​சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை உயர்வினைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையிலும் இன்று தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

குறிப்பாக, ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் 24 கரட் தங்கத்தின் விலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் மற்றும் உலகப் பொருளாதாரக் காரணிகள் தொடரும் பட்சத்தில், வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மேலும் தளம்பல் நிலை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button