News

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்பின் திருத்தம் மற்றும் பிரதான அமைப்புகளுடனான அபிவிருத்திப் பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

காலை 8.30 முதல் மாலை 6.30 வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது

Related Articles

Back to top button