News

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று(29.07.2025) செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பவா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினறும் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமாகிய அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ் உதுமான் லெப்பை, எம்.எஸ் அப்துல் வாஸித், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல். மாஹிர், பிரதேச சபை உறுப்பினர்கள் அவர்களும் உதவி பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் முப்படையினர் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பொது அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியோக செயலாளர்கள் எனப்பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர், அத்துடன் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கான காணி உரிம பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.

Related Articles

Back to top button