World News

ஒப்பந்தம் ஒன்றுக்கு முன் பல சிக்கலான விடயங்கள் உள்ளன!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்னதாக அமெரிக்காவும் ஈரானும் இன்னும் சில சிக்கலான விடயங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளதாக அமெரிக்க துணைத் ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் போர் நிறுத்தத்தை 60 நாட்களுக்கு நீடிக்கும் என்றும், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ட்ரம்ப் மற்றும் ஈரானிய தலைவர்களின் அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில், இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தின் முதற்கட்ட வரைவுக்கு இணங்கியுள்ளதாக செய்திகள் வௌியாகின.

ஆனால், இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவோ அல்லது உறுதிப்படுத்தப்படவோ இல்லை என்று ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு சில விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதுடன்,யுரேனியம் செறிவூட்டல் பற்றியும் விவாதிப்பதாக கூறப்படுகின்றது.

இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு அருகில் இருப்பதாகவே ஜே.டி. வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அதிகளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்வதை நிறுத்த வேண்டும் என்றும், அதன் தற்போதைய இருப்பை அகற்ற வேண்டும் என்றும் அமெரிக்கா நீண்டகாலமாக கோரி வருகிறது.

கோட்பாட்டு ரீதியாக, இந்த யுரேனியம் அணு ஆயுதங்களை உருவாக்க பயன்படுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button