India News

எம்.பி.யாக கமல்ஹாசன் பதவியேற்றார்

மாநிலங்​களவை பாராளுமன்ற உறுப்பினராக டெல்​லி​யில் இன்று பதவி​யேற்​கும் நிலை​யில், ‘இந்​தி​ய​னாக எனது கடமை​யைச் செய்யப்​ போகிறேன்’ என்று மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் பெரு​மிதத்​துடன் கூறி​னார்.

திமுக கூட்​ட​ணி​யின் ஆதர​வுடன் மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலைவர் கமல்​ஹாசன், மாநிலங்​களவை பாராளுமன்ற உறுப்பினராக அண்​மை​யில் போட்​டி​யின்றி தேர்​வுசெய்​யப்​பட்​டார்.

மாநிலங்களவை எம்.பி.யாக திமுக கூட்டணி சார்பில் தேர்வான மநீம தலைவர் கமல்ஹாசன் தமிழில் பதவியேற்றார். பதவியேற்றுக் கொண்ட கமல்ஹாசன் உறுப்பினர் பதவியேற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

பதவியேற்பு விழாவில், “கமல்ஹாசன் எனும் நான், இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன், இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன், நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன்” என்றும் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

Related Articles

Back to top button