Sri Lanka News
தகுதியற்ற நிலையில் இருக்கும் பாடசாலை வேன்கள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 54 வேன்களில் 53 வேன்கள் மாணவர்களை ஏற்றிச் செல்ல தகுதியான நிலையில் இல்லை என்று மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பரிசோதனையின் போது 24 வாகனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாதம்பே போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
மாதம்பே, சிலாபம் மற்றும் ஆராச்சிகட்டுவ பொலிஸ் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 54 பேருந்துகள் மற்றும் வேன்கள் பொலிஸாரின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் ஒரு வாகனம் மட்டுமே மாணவர்களை ஏற்றிச் செல்ல ஏற்ற நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




