Sri Lanka News
இயந்திர நாற்று நடுகை மூலம் பயிரிடப்பட்ட வயல் அறுவடை: கிளிநொச்சியில் விசேட நிகழ்வு.
மாகாண விவசாயத் திணைக்களம் கிளிநொச்சியின் ஏற்பாட்டில் யூனியன் விழுதுகள் இளைஞர் விவசாயக் கழகத்தின் பங்களிப்புடன் இயந்திர நாற்றுநடுகை மூலம் நடுகை செய்யப்பட்ட நெல் வயல் அறுவடை நிகழ்வு யூனியன்குளம் பகுதியில் இன்று நடைபெற்றது .
அக்கராஜன்குளம் விவசாய போதனாசிரியர் கி.சுதர்சினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவசிறீ கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வில் மாகாண மேலதிக விவசாயப்பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் கிளிநொச்சி பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி ,பாடவிதான உத்தியோகத்தர்கள் ,விவசாய போதனாசிரியர்கள் ,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.




