Sri Lanka News
அரச சேவைக்கு 62,000 பேரை இணைக்க அமைச்சரவை அனுமதி – ஜனாதிபதி

அரச சேவைக்கு 62,000 பேரை இணைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாக பட்டதாரிகள் நிமயனம் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் பட்டதாரிகள் பலர் பல இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரச சேவை நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.