Sri Lanka News
துமிந்த திசாநாயக்கவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை

தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கடந்த மே மாதம் 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, துமிந்த திசாநாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், கொழும்பு தலைமை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, 250,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் இரண்டு சரீரப் பிணையிலும் அவரை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.