Cinema
50 மில்லியன் பார்வைகளை கடந்தது “முத்த மழை”

“தக் லைஃப்” திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய “ முத்த மழை ” பாடலின் காணொளி 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
“தக் லைஃப்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய இந்த பாடல் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
குறித்த திரைப்படத்தில் பாடகி தீ முத்த மழை பாடலை பாடியிருந்தாலும் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடியிருந்தார்.
இது இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது குறித்த காணொளி 50 மில்லியனை கடந்துள்ள நிலையில் பாடகி சின்மயி நன்றி தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.