Sri Lanka News

நான் வீட்டில் தான் இருந்தேன்; தவறான இடங்களில் தேடிய பொலிஸார்! தேசபந்து தெரிவிப்பு

பொலிஸார் தன்னைத் தேடி வந்த காலப்பகுதியில் தாம் கிரியுல்லவில் உள்ள தமது இல்லத்திலேயே தான் தங்கியிருந்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

தமக்கெதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்துவரும் நாடாளுமன்றக் குழுவில் நேற்று 11 ஆவது நாளாகவும் முன்னிலையாகியிருந்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குழுவின் முன் சாட்சியமளித்த தேசபந்து தென்னக்கோன்,

வீட்டில் விளக்குகளை இயக்காமல் தனியாக வசித்து வந்ததாகவும், மின்சாரம் இல்லாததால் அதற்கு பதிலாக மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

தவறான இடங்களில் பொலிஸார் தன்னைத் தேடி வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மாத்தறை, வெலிகமவில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தமக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் அந்த குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button