Sri Lanka News
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் நாளை (15) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படுமென நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு, 1,421,745 பயனாளிகளுக்கு ரூ.11,275,973,750.00 (11,276 மில்லியன் ரூபாய்) வங்கிகளுக்கு வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பயனாளிகள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் பணத்தைப் பெற முடியும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.