2026 ஆரம்பத்திலேயே இலங்கையில் சுற்றுலாத்துறை எழுச்சி: 11 நாட்களில் 94,000 பயணிகள் வருகை!

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 94,041 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தின் முதல் 11 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 16,772 ஆகும்.
அத்துடன், ரஷ்யாவிலிருற்து 10,927 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,676 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 7,060 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 4,591 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 3,671 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 3,490 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டின் இரு வாரங்களிலேயே சுற்றுலாத்துறை பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.



