Home இலங்கைச் செய்திகள்ஆனைச்சேனையில் 40 வருடங்கள் பழமையான பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம்; ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு

ஆனைச்சேனையில் 40 வருடங்கள் பழமையான பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம்; ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு

by Nabishad
0 comments

மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை பகுதியில், தி/அல்ஹிதாயா பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள சுமார் 40 வருடங்கள் பழமையான பாலம் திக்வா புயலினால் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.

சேதமடைந்த இப்பாலத்தின் ஊடாக வாகனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயணிப்பது பெரும் அச்சுறுத்தலாக இருந்த நிலையில், அதற்குப் பதிலாக புதிய பாலம் அமைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் ரூ.1 கோடியே 50 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக NPP மூதூர் அமைப்பாளர் கே.எம். சப்றான் மற்றும் NPP பிரதேச சபை உறுப்பினர் றிபான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், Clean Sri Lanka மூதூர் இணைப்பாளர் ரம்சி, பாடசாலை அதிபர், பிரஜா சக்தி தலைவர், RDS தலைவர், பள்ளிவாசல் தலைவர், NPP மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

banner

மூதூர் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நீண்டகாலமாக மக்களால் எதிர்பார்க்கப்பட்ட அடிப்படை வசதிகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், மூதூர் பிரதேசத்தின் நீண்டகால அபிவிருத்தித் தேவைகள் கடந்த காலங்களில் போதியளவில் கவனிக்கப்படவில்லை என்பதையும், பல வருடங்களாக மூதூரை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகள் மக்களின் அடிப்படைத் தேவைகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் மக்கள் மத்தியில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

#புதியபாலம் #NPP #தேசியமக்கள்சக்தி #Socialtv #News

You may also like

Leave a Comment