Sports
2025 LPL தொடர் தேதிகள் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நவம்பர் 27 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு, இது ஆறாவது LPL தொடராகும்.
போட்டிகள் கொழும்பு, பல்லேகலை மற்றும் தம்புள்ளை ஆகிய மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடர், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு ஒரு சிறந்த ஒத்திகையாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.