Home இலங்கைச் செய்திகள்சாய்ந்தமருதில் நேற்று, சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் அமைப்பின் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சாய்ந்தமருதில் நேற்று, சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் அமைப்பின் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

by Mohamed Siraj
0 comments

அமைப்பின் தேசிய தலைவர் ஏ.ஆர். அமீர்கான் அவர்களின் வழிகாட்டலில், பணிப்பாளர் எஸ்.எல். றசீட் மற்றும் பிரதி பணிப்பாளர்களான எம்.ஐ. அப்ரோஸ், எம்.பி. நூமைசா, எஸ்.எப். சஹானி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டதுடன், அம்பாரை மாவட்டத்தில் பொதுமக்களின் சமூக நலன்களை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கல்முனை பிரதேசத்தில் இரத்ததான முகாம் நடத்துவது, சுற்றுசூழலை சுத்தமாக வைத்திருக்கும் முகமாக விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் சிரமதானப் பணிகளை மேற்கொள்வது, நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பது மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என்பன இதன் போது ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

banner

இந்தக் கலந்துரையாடலில் பிரதி பணிப்பாளர்களான எம்.எச்.எப். சாஹானா பானு, எம்.எப்.எப். அக்ஸா, இணைப்பாளர்களான ஜே.எப். சுஜிமா, எம்.ஆர்.எம். ரோசான், எம்.ஏ.சி.எம். பாயிஸ் கரீம், ஏ.எம்.எப். ரிபா, ஆர்.எம். ரூமி, ஐ. ஜாபீர் மற்றும் அங்கத்தவரான செயின் நௌபல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment