Home இலங்கைச் செய்திகள்42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்சிகள் போருதோட்டையில் இன்று (22) ஆரம்பமாகியுள்ளன.

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்சிகள் போருதோட்டையில் இன்று (22) ஆரம்பமாகியுள்ளன.

by ruzny
0 comments

பிரதி சபாநாயகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாம் பார்வையிடப்பட்டது. அல்-பலாஹ் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் போர்ட்(Smart Board) இயந்திரம் ஒன்றும் நன்கொடையாக வழங்கப்பட்டது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நினைவுத் தொடரின் ஆரம்ப நிகழ்வு, போருதோட்டை பிரதான ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற சமய வழிபாடுகளைத் தொடர்ந்து இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள், மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவர்கள் உள்ளிட்ட அழைப்பாளர்களின் பங்களிப்புடன், அல்-பலாஹ் மகா வித்தியாலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாமின் பணிகள் பார்வையிடப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

banner

You may also like

Leave a Comment