Home இலங்கைச் செய்திகள்ஆரையம்பதியில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களுக்கான அருணலு கணக்கீட்டுப் பயிற்சி

ஆரையம்பதியில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களுக்கான அருணலு கணக்கீட்டுப் பயிற்சி

by Nabishad
0 comments

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை பிரிவினால் மட்டக்களப்பின் நான்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் தலைவர்களுக்கான அருணலு பயிற்சி இன்று (20) மண்முனைப் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .

மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சண கௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், வளவாளர்களாக க. பகிரதன், சமுர்த்தி முகாமையாளர் நா. சசிகரன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி வகுப்பில் மன்முணைப் பற்று, மண்முனை தென் எருவில்பற்று, போரதீவுப் பற்று, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு தலைவர்கள் பங்குபற்றியதுடன், பிரயோக ரீதியாக கணக்கீட்டுப் பயிற்சியளிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment