World News
டெஸ்லாவுடன் கைகோர்க்கும் சேம்சங்

மின்சார சிற்றூந்து தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வரும் ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா (Tesla) நிறுவனம், தென் கொரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சேம்சங் எலெக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்துடன் $16.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சிப் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஈலோன் மஸ்க் இதனை அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் 2033 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தமானது சேம்சங் நிறுவனம் இதுவரை கையெழுத்திட்ட மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.
அத்துடன் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், சேம்சங்கின் பங்குகள் 4%–6% வரை உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.