Sri Lanka News

பேலியகொடவில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பேலியகொட, களனி பாலத்திற்கு அருகில் கொள்கலன் லொறி ஒன்று திடீரென பழுதடைந்துள்ளதால், கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், பழுதடைந்த லொறியை வீதியிலிருந்து அகற்றுவதற்கும் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, இப்பாதையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Articles

Back to top button