World News

நடுவானில் இயந்திர கோளாறு;திடீரென தரையிறக்கப்பட்ட விமானம்..!

லண்டனிலிருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் புறப்பட்ட பிரித்தானியப் பயணிகள் விமானம், திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மீண்டும் லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது.

லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்னை வந்து கொண்டிருந்தது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

உடனே இதுகுறித்து விமானி லண்டன் விமான நிலையத்திற்கு தகவல் அளித்தார். பின்னர் அந்த விமானம் மீண்டும் லண்டனிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறங்கினர் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேவேளை லண்டனிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து லண்டனுக்கும் புறப்படவிருந்த இரண்டு பிரித்தானியப் பயணிகள் விமானசேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 700க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

Back to top button