News

சிறைச்சாலைகள் நெரிசலின் உச்சத்தில் – 33,000யை கடந்த கைதிகள் எண்ணிக்கை!

நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 17ஆம் திகதி நிலவரப்படி 33,095 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெலிக்கடை சிறைச்சாலையில் மட்டும் 750 பேர் தங்கக்கூடிய இடத்தில் 3,557 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மகசின் சிறையில் 625 பேர் தங்கக்கூடிய இடத்தில் 2,985 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் உள்ளவர்கள் மட்டும் 2,426 கைதிகள் எனவும், 385 கைதிகள் தங்கக்கூடிய இடத்தில் இவ்வளவு பேர் இருப்பது தீவிர நெரிசலை ஏற்படுத்தியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையிலும் 220 கைதிகள் தங்கக்கூடிய இடத்தில் 561 பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button